Tuesday, June 9, 2009

டைட்டானிக் விபத்தில் பிழைத்த கடைசி நபரும் மரணம் !


டைட்டானிக் கப்பல் பெரும் விபத்து நிகழ்ந்த நேரத்தில் அந்தக் கப்பலில் இருந்து உயிர்தப்பியவர்கள் பயணம் செய்தவர்களோடு ஒப்பிடும் போது வெகு சிலர் மட்டுமே.

அப்படி உயிர்தப்பியவர்களில் பலர் மரணித்துவிட்டனர்.
உயிருடன் இருந்தவர் Millvina Dean.
அவரும் தனது 97வது வயதில் மரணமாகி இருக்கிறார்.

உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த சனிக்கிழமை காலையில் இங்கிலாந்தின் Southampton நகரில் உயிரிழந்திருக்கிறாராம்.
டைட்டானிக் கப்பலில் அவர் பயணம் செய்யும் போது அவருக்கு வயது 9 வாரங்கள் மட்டுமே...
டைட்டானிக் விபத்து நடந்தது 1912ல்.
Millvina என்று அழைக்கப்படும் Elizabeth Gladys Dean 1912ஆம் ஆண்டு, feb 2ம் திகதி பிறந்தார்.
பிறந்து 2 மாதங்களில் பெற்றோருடன் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்திருக்கிறார்.
அமெரிக்காவில் குடும்பத்தோடு Kansas மாகாணத்துக்கு பயணிக்கும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நகழ்ந்த நேரத்தில் Millvinaவின் தந்தை Mr.Dean தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை கப்பலின் மேற்தளத்துக்கு கொண்டு சென்று விட்டுவிட்டார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பிக்க Dean விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.

அதன் பிறகு இங்கிலாந்து வந்து வாழ்ந்து வந்தார் Millvina.
கடந்த சனிக்கிழமை தனது 97வது வயதில் உயிரிழந்து இருக்கிறார் Millvina.
ஆக டைட்டானிக் கப்பல் விபத்தில் இருந்து உயிர்தப்பியவர்களில் கடைசி நபரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்...

No comments:

Post a Comment